சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வைரஸ் எதனால் பரவுகின்றது என்ற குழப்பம் மருத்துவர்களுக்கு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் இதுதொடர்பாக புதிய தகவல்களை மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதன்படி எறும்புத்தின்னி உடலில் உள்ள வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரஸ்சுடன் ஒத்திருப்பதால் இந்த வைரஸ் மனிதர்களுக்கு எறும்புத் தின்னிகளிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். எறும்புத்தின்னி மூலம் முதலில் பாம்புகளுக்கும், பிறகு அதிலிருந்து மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என கூறப்படுகின்றது.