அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இவர்கள் இருவரின் சந்திப்பு உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது, ரஷ்ய உளவுத்துறையை சேர்ந்த 12 பேர் மீது குற்றச்சாட்டு என்று அமெரிக்கா ரஷ்யா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தது. மேலும் சிரியாவில் நடக்கும் போரில் இவ்விரு நாடுகளும் எதிர் எதிரே போர் செய்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் ரஷ்யா மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்ஸின்கியில் இவ்விரு அதிபர்களும் சந்தித்து பேசுகின்றனர். அமெரிக்க ட்ரம்ப் கடந்த மாதம் வடகொரிய அதிபர் கிம்முடனான சந்திப்பை தொடர்ந்து ரஷ்ய அதிபருடனான சந்திப்பு பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, அமெரிக்காவில் இருக்கும் அமைச்சர்கள் பலர், இச்சந்திப்பிற்கு எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.