Skip to main content

இரண்டு மணிநேரத்தில் பேஸ்புக்குக்கு வந்த சோதனை!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
FB

 

 

 

பேஸ்புக் நிறுவனம் 2 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர் அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

 

நேற்று பேஸ்புக்  நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சரிவில்  சுமார் 150 பில்லியன் டாலரை இழந்து வீழ்ச்சி அடைந்தது. இந்த இழப்பானது  இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பை விட அதிகம் எனக்கூறப்படுகிறது.

 

வீழ்ச்சியை சந்தித்த அந்த இரண்டு மணி நேரத்தில் மட்டும் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து 15.8 பில்லியன் குறைந்தது. இதனால் அவரது சொத்து மதிப்பு தற்போது 70 பில்லியனுக்கு கீழ் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

FB

 

 

 

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் எண்ணிக்கை மந்தம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த வீழ்ச்சி உணரப்பட்டிருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்