கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கரோனா எனும் வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அதன் பின் இந்தாண்டின் தொடக்கத்தில் மெல்ல பரவத் தொடங்கி இன்று உலகம் முழுக்க அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. பல தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தாலும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா பரவல் குறித்து தொடர்ந்து சீனா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் கரோனா விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ஜி ஜின்பிங், "கரோனா விவகாரத்தில் நாங்கள் முழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொண்டோம். இத்தொற்றில் இருந்து இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் காப்பாற்ற உதவியுள்ளோம். சீனா பொருளாதரத்தில் மெல்ல மீண்டு வருகிறது" என்றார்.