Published on 22/03/2022 | Edited on 22/03/2022
சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கித் தீப்பிடித்த சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் குன்மிங் என்ற இடத்திலிருந்து குவாங்சூ மாகாணத்துக்கு 132 பயணிகளுடன் சென்ற ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மலைப்பகுதியில் மோதி தீப்பிடித்து விழுந்ததாகச் செய்திகள் நேற்று வெளியானது. இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற தகவலும் அதிகாரிகளின் மட்டத்தில் வெளியானது. மலையிலிருந்து விழுந்து நொறுங்கிய போயிங் 737 ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.