bmw கார் வைத்திருக்கும் சீனாவைச் சேர்ந்த பணக்கார விவசாயி ஒருவர் பெட்ரோலுக்காக பண்ணைகளிலிருக்கும் கோழி, வாத்துக்களை திருடியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஐம்பது வயது விவசாயி ஒருவர் bmw காரை வாங்கிவிட்டு, அதற்கு பெட்ரோல் போட பணமில்லாமல் தவித்து வந்திருக்கிறார். மிகப்பெரிய வீட்டில் வசிக்கும் அந்த பணக்கார விவசாயிக்கு, தற்போது பணமில்லாமல் தவித்து வருகிறார் போல. அதனால் தன்னுடைய காருக்கு பெட்ரோல் போட அவர் வசித்து வரும் கிராமத்தில் இருக்கும் பண்ணைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று கோழி மற்றும் வாத்துகளை திருடி அதை தன் வீட்டில் வளர்த்து நல்ல பணத்திற்கு விற்று bmw காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
கிராமத்தில் கோழி, வாத்து திருட்டு அதிகாமனதை அடுத்து பண்ணைகளில் சிசிடிவி வைத்து திருடன் யார் என கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். பின்னர், இவர் மாட்டிக்கொண்டு தன்னுடைய காருக்கு பெட்ரோல் போடுவதற்காகதான் திருடினதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இவரை போலீஸ் கைது செய்ய வரும்போது அந்த bmw காரிலேயே தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அந்த கிராமத்தில் சாலை வசதி சரி இல்லாததால் போலீஸிடம் எளிதாக மாட்டிக்கொண்டார்.