பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சமூகவலைத்தள பக்கங்களை நிர்வகிக்க அட்மின் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசெபத் கடந்த மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கையாள தெரிந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணியில் அமர்த்தப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 26.5 லட்ச ரூபாய் சம்பளமும், ஆண்டுக்கு 33 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிய உணவு அரண்மனையிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதல் மாலை வரை அரண்மனையிலேயே இருந்து மகாராணி பதிவிட சொல்வதை பதிவிடுவது மட்டுமே வேலையாம். தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு ஆன்லைனிலும் அப்ளை செய்யலாமாம்.