பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ அருங்காட்சியம் முழுவதிலும் பற்றிக்கொண்டது. இத்தீயை நிறுத்த ஏழு தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், அருங்காட்சியத்திற்கு அருகாமையில் தீயணைக்கும் அளவிற்கு நீரில்லை என்பதால், கொஞ்சம் தொலைவில் இருக்கும் ஏரியில் இருந்து தீயை அணைக்க நீர் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
15ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் காலெடுத்து வைத்த போர்துகீசியர்களால் கட்டப்பட்டது இந்த அருங்காட்சிய கட்டிடம். போர்துக்கீஸை சேர்ந்த ராயல் குடும்பம் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர். பின்னர், இது நீதி மன்றமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1818ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் இதை அருங்காட்சியமாக மாற்றியுள்ளனர். இதில் சுமார் 2 கோடி வரலாற்று பொருட்கள், ஆவணங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை இருக்கிறது. அவற்றில் பல பொருட்கள் தீயில் கருகிவிட்டன என்று தெரிவித்துள்ளனர். மக்கள் பலர் பிரேசிலின் கலாச்சாரம் தீயில் கருகிக்கொண்டு இருக்கிறது என்று பெரும் சோகத்தில் உள்ளனர்.