
கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பேர் அங்கு கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்ததால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தையே பரபரப்பாக்கியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற குல்பிர் சிங், சாஹிப் சிங், குர்ஜண்ட் சிங், நிண்டர் கார் ஆகிய 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழப்புகளைத் தடுக்க மதுபானம் அருந்தக்கூடிய மேலும் பலரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தது மட்டுமல்லாமல் 5 கிராமங்களில் இருந்து மது மது அருந்திய 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.