news about fire incident kuwait city

குவைத்தில் மங்காப் நகரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்கிற தொழிலதிபருக்கு சொந்தமான 6 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இதில் 195 தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் இந்தியாவின் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கியுள்ள கட்டிடத்தில் இன்று (12.06.2024) அதிகாலை நான்கு மணியளவில் மங்காஃப் பிளாக் 4 இல் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisment

இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளது. கட்டிடத்தில் தீ பரவுவதைக் கண்டு கீழே இறங்க வழி இல்லாததால் பலர் மேலே இருந்து கீழே குதித்ததால் சிலர் காயமடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீ விபத்தில் சிக்கிய 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

Advertisment

news about fire incident kuwait city

இந்த தீ விபத்தில் காயமடைந்த 21 பேர் அதான் மருத்துவமனையிலும், 11 பேர் முபாரக் அல் கபீர் மருத்துவமனையிலும், 4 பேர் ஜாபிர் மருத்துவமனையிலும், 6 பேர் ஃபர்வானியா மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் பெயர் விவரம் இன்னும் முழுமையாக வெளியாக இன்னும் சில மணிநேரமாகும் என கூறப்படுகிறது.

இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் ஊழியர்கள் வசிக்கும் இந்தக் கட்டிடத்தில் இறந்தவர்கள் காயம்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பதால் இந்திய தூதரகத்தின் அதிகாரிகளில் ஒருவரான ஆதார் ஸ்வேதா என்பவர் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். மேலும் மருத்துவமனைக்குச் சென்று தீவிர சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

Advertisment

news about fire incident kuwait city

தொழிலாளர்களுக்கான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகத்தின் மூலம் செய்யப்படும் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள உறவினர்கள் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க தகவல் அறிந்து கொள்ள சில தொலைபேசி எண்களும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளன. கட்டடத்தின் கீழ் தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. குவைத் நாட்டின் துணை பிரதமர் ஷேக் அஹமத் யூசுப் ரியல் எஸ்டேட் துறையினர் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் அவர்கள் விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை இந்த விபத்துக்கு காரணமான கட்டடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.