Skip to main content

அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கிய எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
A trust provided air conditioning machine to a government hospital

எம்.சி.கே.எஸ் அறக்கட்டளை அரசு மருத்துவமனைக்கு குளிரூட்டும் இயந்திரம் வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி ஜமீன் பல்லாவரத்தில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் சோர்வு அடையாமல் இருக்க ஒரு லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள மூன்று குளிர்சாதன பெட்டிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்டது.

சுகாதார நிலையத்தில் பொருத்தப்பட்ட குளிர்சாதன பெட்டிகளை பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் இயக்கி வைத்தனர்.

பின்னர் இது குறித்து மருத்துவ மகேந்திரன் கூறுகையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் வருகின்றனர். இவர்கள் சோர்வுடன் வருவதை கண்ட எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் மற்றும் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் குளிர்சாதன பெட்டிகளை வழங்கி உள்ளனர். மேலும் தேவையான உதவி செய்வதாக தெரிவித்த அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர் லியோ ஆகாஷ் ராஜ் பேசுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக வருவதும், அவர்கள் புழுக்கத்தால் சோர்வு அடைவதையும் எங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிந்து எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பைச் சேர்ந்தவர்கள்  உதவியுடன் குளிர்சாதன பெட்டிகளை வழங்கியதாக தெரிவித்தார்.

இதில் பிரிட்டி லிட்டில் ஆர்ட்ஸ் மற்றும் எம்.சி.கே.எஸ் டிரஸ்ட் ஃபண்ட் என்கிற பிராணிங் கீலிங் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்