Published on 12/02/2019 | Edited on 12/02/2019

2018-ல் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதானது. அதன் பின் தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பிஷப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றது. அதன் வழியில் தற்போது மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பிஷப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.