Published on 29/12/2022 | Edited on 29/12/2022

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இருந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இந்த மருந்தைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.