Published on 30/08/2018 | Edited on 30/08/2018

ஆன் சான் சூகிக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற முடியாது என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. மியன்மாரில் நடக்கின்ற இசுலாமியர்களுக்கு எதிரான தீண்டாமை, பாலியல் கொடுமைகள் போன்ற எந்த ஒரு கொடுமைக்கும் குரல் கொடுக்கவில்லை என்று அவரின் மீது விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. 1991ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப்பெற வேண்டும் என்று பல கூறினர்.
இந்நிலையில்," விருதுகள் என்பது முந்தைய சாதனைகளை பொறுத்துதான் தரப்படுவது. வழங்கப்பட்ட விருதை திரும்பப்பெற விதிகளில் இடம் இல்லை" என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.