வெளிநாட்டினர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பெரும்பாலானவர்கள் மெக்ஸிகோ வழியாகவே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருவதாக டிரம்ப் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுக்காவிட்டால், மெக்சிகோ மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் சமீபத்தில் மெக்ஸிகோவை எச்சரித்து இருந்தார்.
இதனையடுத்து மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் இந்தியாவுக்கு நாடுகடத்தியுள்ளனர். சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் மெக்ஸிகோவில் இருந்ததாக கூறி அவர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். டொலுகா சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போயிங் 747 விமானம் மூலம் 311 இந்தியர்களும் புதுடெல்லிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.