
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. 15 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 45,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேலும் பலரையும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த போர் உலகையே களங்கடிக்க செய்தது.
இறுதியாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது.
இந்த போர், முடிவுக்கு வந்தது என உலக மக்களுக்கும் பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில் நேற்று (22-03-25) நள்ளிரவு நேரத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரும், பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினருமான சலாஹ் பர்தாவில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சலாஹ் பர்தாவிலுடைய மனைவியும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.