Skip to main content

ஒற்றை கண்ணுடன் பிறந்த நாய் குட்டி... வைரலாகும் புகைப்படம்!

Published on 04/02/2020 | Edited on 05/02/2020

தாய்லாந்தில் ஒற்றை கண்ணுடன் பிறந்த நாய்குட்டி அங்குள்ள மக்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்ஜாய். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அவருக்கு நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளை வளர்ப்பதில் அலாதி பிரியம் வைத்திருப்பார். அவரிடம் 5க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளது.



இந்நிலையில், அவர் வளர்த்து வந்த ஒரு நாய் குட்டி தற்போது குட்டி போட்டுள்ளது. ஆனால் நாய் குட்டிகளில் ஒரு குட்டிக்கு மட்டும் இரண்டு கண்ணுக்கு பதிலாக ஒரு கண் மட்டுமே இருந்துள்ளது. அதேபோன்று வால் பகுதியும் குட்டியாக இருந்ததுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அந்த நாய் குட்டியை விநோதமாக பார்த்து செல்கிறார்கள். நாயின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.