30 வருடங்களுக்கு முன் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் 30 வருடங்களுக்கு பிறகு பனிக்கட்டிகளுக்கு நடுவில் அமர்ந்தபடி மெழுகு சிலைபோல கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் 1987-ஆம் ஆண்டு எலினா பேஸிகினா என்ற இளம் பெண் தனது ஆறு நண்பர்களுடன் ரஷ்யாவின் உயரிய பனிமலைகளில் ஒன்றான எல்பிரஸ் மலைப்பகுதிக்கு மலை ஏற்றம் சென்றுள்ளார். ஏற்கனவே அவர் ரஷ்யாவின் தொழிநுட்பத்துறையில் பணியாற்றிவந்தார். இப்படி கூட்டாக மலையேற்றம் சென்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு நண்பர்கள் உட்பட எலினாவும் சிக்கிக்கொண்டார். ஆனால் அந்த இடரிலிருந்து தப்பித்த மற்ற ஆறு நண்பர்களும் எலினாவை மீட்க பலமுயற்சிகள் எடுத்தும் எலினாவை கண்டுபிடிக்கமுடியாமல் வீடு திரும்பினர். பின்னர் மீட்பு வீரர்களைக்கொண்டு நடைபெற்ற தேடும் பணிகளிலும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியே நாட்கள் ஓட 30 வருடங்கள் ஓடிப்போனது. எலினா வீட்டார் கண்டிப்பாக இவ்வளவு முயற்சி எடுத்தும் அவள் சடலம் கூட கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவள் எங்கவாது தப்பித்து சென்றிருப்பாள் அல்லது அவளை யாராவது கடத்தி இருக்கலாம் என நினைத்து வைத்துள்ளனர்.
ஆனால் தற்போது அங்கு சுற்றுலா சென்ற சுற்றுலா குழுவினர் 4,000 மீட்டர் தூரத்தில் ஒரு உடல் மெழுகு சிலைபோல் உறைந்த நிலையில் இருப்பதை அறிந்து அந்த உடல் 30 வருடங்களுக்கு முன் காணாமல் போன எலினா என உறுதிசெய்துள்ளனர். அந்த இடரில் சிக்கிய நேரத்தில் எலினா உடுத்தி இருந்த அதே உடையுடன் அமர்ந்தபடி மெழுகு சிலைபோல கிடைத்துள்ளார். அதுதொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.