Published on 04/02/2022 | Edited on 04/02/2022
இஸ்ரேலில் ஒரே நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவரை ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய மூன்று வகையான தொற்று தாக்கிய சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வகையான தொற்று மிகவும் அரிதான ஒன்று எனவும், தற்போது தொற்று பாதிக்கப்பட்ட சிறுவன் குணமடைந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஒரே நேரத்தில் அனைத்து வகையான வைரஸூம் ஒருவரை தாக்கும் என்பது எளிதில் நம்பும் படியாக இல்லை என்றாலும், உண்மை அதுதான் என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்கள். இதுதொடர்பாக நீண்ட ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளதாகவும் இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.