Skip to main content

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மாமனார், மருமகன்; சொத்தின் மதிப்பு...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் தரவரிசையை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

 

fgjgfhjghgh

 

அதன்படி அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், வாரன் பூபட் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 6 இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அம்பானி 19 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் அறிக்கையின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை அம்பானி தக்கவைத்துள்ளார். மேலும் அவரது சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் எச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் 91-வது, ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமார் பிர்லா (122), அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கவுதம் அதானி (167), பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244), பதஞ்சலி ஆயுர்வேதாவின் இணை நிறுவனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா (365), பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்-ஷா (617), இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி (962) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் அம்பானியின் மருமகனான ஆனந்த் பிராமலின் குடும்பம் 436 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்