சுமார் 44,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியத்தை இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனித வரலாற்றிலேயே கண்டறியப்பட்ட மிக பழமையான ஓவியங்களில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியங்களை 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குகையில் வாழ்ந்த மனிதர்கள் வரைந்துள்ளனர். மனித உடல் பாகங்கள், விலங்குகளில் தலைகள், உருவங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்டவைகள் இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன.
பாதி மனித உடல், பாதி விலங்கு உடல் என வினோதமான உடலமைப்பை கொண்டிருக்கும் வகையில் உள்ள உயிரினங்கள் ஈட்டிகளையும், கயிறுகளையும் கொண்டு ஒரு பெரிய எருமையை வேட்டையாடுவது போல இந்த ஓவியம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு, 73,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகின் மிக பழமையான குகை ஓவியம் ஆகும்.