/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/weff_0.jpg)
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்தஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார்.யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.
இதனையடுத்துஜப்பான் பிரதமர்யோஷிஹிதே சுகா,தனது கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். பிரதமர் யோஷிஹிதே சுகா தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராவார். சுதந்திர ஜனநாயக கட்சியே ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பதால், அக்கட்சியின் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்யோஷிஹிதே சுகா, தான் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன அறிவித்ததால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போதுசுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்துஇவர்ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
ஃபுமியோ கிஷிடாஏற்கனவே 2012 - 2017இல் ஜப்பானின்வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில்தற்போதைய பிரதமர்யோஷிஹிதே சுகாவிடம்தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)