Published on 20/11/2019 | Edited on 20/11/2019
ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருவோருக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டவர்கள் விசா காலம் முடிந்த பின்னர் தங்கியிருத்தல், போலி பெயர், சான்றிதழ் உடன் இருத்தல் என சட்டத்துக்கு புறம்பான விஷயங்களில் ஈடுபட்டு தங்கியிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி 117 இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவிற்கு நாடு கடத்திய நிலையில் தற்போது மீண்டும் 145 பேர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இருந்ததால் முதலில் அவர்களை வங்கதேசத்தில் விட்டுவிட்டு பின்னர் 145 இந்தியர்களை இன்று காலை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விட்டுள்ளனர்.