
கோவையில் இளைஞர்கள் மதுக்கடைகள் மூடப்பட்டதனால் போதை பொருட்களை பயன்படுத்துதல் அவர்களாகவே தயாரித்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அப்படி சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையில் ஆத்துப் பாலமருகே சுற்றிய இளைஞர்களை விசாரணை செய்தனர் போலீஸார். அப்போது அந்த இளைஞர்கள் போதை தருகின்ற மாத்திரை வைத்திருந்துள்ளனர்.
முஹம்மது யாசிர், முஹம்மது முஸ்தபா, அன்சாரின், முகமது ஆகிய நான்கு பேர் தங்களுக்கு போதை மாத்திரைகளை விற்றதாக அந்த இளைஞர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். இவர்கள் மது கடைகள் மூடப்பட்டதனால் போதை மாத்திரை, போதை பொருளினை போன்று போதை தருகின்ற ஊசியினை விற்று வந்ததாகவும் தெரிவித்தனர். கோவை இளைஞர்களின் இந்த செயல்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைய செய்திருக்கின்றதாக உக்கடம் போலீஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 50 போதை மாத்திரையை கைப்பற்றி விசாரித்து கொண்டிருக்கின்றனர்.