Published on 21/04/2023 | Edited on 21/04/2023

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் மரப்பாலம் அருகே உள்ள பழைய நடராஜா தியேட்டர் அருகில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் ஈரோடு, பெரியார் வீதியைச் சேர்ந்த ஆனந்த் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ. 11,000 மதிப்பிலான கஞ்சா மற்றும் பணம் ரூ. 3,570 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.