திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி கரையில் நின்றுக்கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட புகாரில் வெற்றிசெல்வம்(27) என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வெற்றிச்செல்வம், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட மேல் விசாரணையில் வெற்றிசெல்வம், குமரன் நகர் பகுதியில் இரண்டு வீடுகளில் இருந்து இரண்டு இருசக்கர வாகனத்தைத் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து அந்த இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், வெற்றிசெல்வம் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் அவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர், திருச்சி மாநகர் காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து ஆணையர் கார்த்திகேயன், வெற்றிசெல்வத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.