Published on 26/08/2019 | Edited on 26/08/2019
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
![women try to fires with family in Tuticorin Collector office](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wx25Kwkebn3Zq0Oh_i64212VU3IfL3tymWzOaolaBos/1566811649/sites/default/files/inline-images/zz27_3.jpg)
இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த திருச்செந்தூர் தாலுகா பள்ளிப்பத்து கிராமத்தை சேர்ந்த மேரி (53), ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள். மேரிக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா கேட்டும், வருவாய்த்துறை அலைக்கழிப்பு செய்வதே, தற்கொலை முயற்சிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.