அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி திருமானூரில் பெண்கள் தங்களது வீட்டின் முன்பாக கோலமிட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்டா பகுதியான அரியலூர் மாவட்ட மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் அல்லாடும் நிலை வரும், மேலும் உணவுக்கு வெளிநாட்டினரிடம் கையேந்தும் நிலையை உருவாக்கிட மத்திய அரசு எத்தனிப்பதாக கூறி தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட முன் வர வேண்டும். இல்லையெனில் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு அறிவிக்கும் வரை பெண்கள் தினம் ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரித்தனர்.
இப்போராட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், வேலுமணி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி, வினோத் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.