
சிபிஎஸ்இ பள்ளிகளை அமைப்பதற்கு மாநில அரசிடம் என்.ஒ.சி பெறத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து என்.ஓ.சி என்று அழைக்கப்படும் தடையில்லா சான்று பெறவேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
தடையில்லா சான்றிதழை பெற்ற பிறகு தான் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடமே பெறமுடியும் என்ற நிலை இருந்த நிலையில் இந்த அறிவிப்பு தளர்த்தப்பட்டுள்ளது. இது மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் செயல் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் 450 தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வரும் காலங்களில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மெட்ரிகுலேசன் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையுமா? இதனால் கல்வி கட்டமைப்பில் இன்னும் செல்லச் செல்ல என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என பல்வேறு யுகங்கள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.