Skip to main content

மத்திய, மாநில அரசுகளின் காதில் விழுமா? 'விவசாயிகளின் கோரிக்கை'

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

தமிழ்நாட்டின் மூலாதாரமாக உள்ள விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் அத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பேரவை கோரியுள்ளது.

 

farmers

 

மறைந்த ஈசாய் சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையிலான அமைப்பு இன்று கோபிசெட்டிபாளையத்தில் பேரவை நடத்தியது. அதில் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டத்தினால் பெறப்பட்ட இலவச மின்சாரம் தொடர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றும், சமீபகாலத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மக்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதால் விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்.

 

farmers

 

அதேபோல் மத்திய அரசு விவசாயிகளின் மீது தனி அக்கறை செலுத்தி விவசாயத்திற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் விவசாயிகள் கடன் சுமையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மத்தியில் பாஜக மோடி அரசு அமைந்த பிறகு இதன் எண்ணிக்கை மேலும் மேலும் கூடி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் அவர்களின் கோரிக்கையும் மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் விழும் என்பது சந்தேகம்தான்.

 

 

சார்ந்த செய்திகள்