Skip to main content

திருமணத்தை மீறிய உறவை வைத்துக் கொண்டு மிரட்டும் கணவர்; மனைவி பரபரப்பு புகார்

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Wife complains about husband threatening her by marrying another woman

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் அடுத்த கணியம்பாடி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராதா ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் எனது கணவர் ரமேஷ் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வருகிறார். எனது கணவருக்கும், பெருமாள் கோயில் தெரு, வேலப்பாடி பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு திருமணம் செய்து வைத்த எனது மாமியார் மீனாட்சி என்பவரிடமும் எனது கணவர் ரமேஷ் மற்றும் சித்ரா ஆகியோரிடம் தட்டிக் கேட்ட போது மூன்று பேரும் சேர்ந்து என்னை அசிங்கமாக திட்டியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்ததோடு, எனது 2 பிள்ளைகளயும் பிடுங்கி வைத்துக் கொண்டு வெளியே துரத்தினார்கள்.

இது சம்பந்தமாக நான் கடந்த 8.5.22024 அன்று தங்களிடம் மனு அளித்தேன். இந்த மனு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. மனு மீது கடந்த 17.5.2024 அன்று வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு எனது 2 பிள்ளைகளை எனது கணவர் ரமேஷ், சித்ரா, மீனாட்சி ஆகியோரிடம் இருந்து மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர். அன்றைய தேதியிலிருந்து அதன்பின் மகளிர் காவல் நிலையத்தில் அவர்களை அழைத்து எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

இது சம்மந்தமாக வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினர். அந்த மனு மீதும் எந்தவித விசாரணை மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது.

மேலும், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி இந்த மனு விசாரணை மேற்கொள்ளாத அளவிற்கு ஒரு தலைபட்சமாக மேற்சொன்ன நபர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். எதிர் மனுதார்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்.

மேலும், எனது கணவர் போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு நான் அளித்த புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டுகிறார். எனவே எனக்கு ஏதாவது என்றால் எனது கணவர் மற்றும் அவரது தாய் மீனாட்சி மற்றும் சித்ரா தான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்