ஆண்டிபட்டி - வைகை அணை அருகில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லாரியில் நடந்த ஆறு கோடி டெண்டரின் மர்மம் என்ன? என்ற பீதி காண்ட்ராக்டர்களிடமும் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.
தேனி மாவட்டதில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வைகை அணை அருகில் வனவியல் பயிற்சி கல்லூரி கடந்த 1961 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கட்டிடம் கட்டுதல், பஸ்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக ஆறு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் நடை பெற்ற டெண்டர் முறையாக நடைபெறவில்லை என்றும், பெயர் அளவிற்கு மட்டுமே பி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு, அரசு நாளிதழில் டெண்டர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்டக்கால இடைவெளியில் ஆன்லைன் டெண்டர் மூலமாகவோ (அ) சீல் இடப்பட்ட உரையில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட வேண்டும் என்பது அரசு விதி.
ஆனால் இதில் எதுவுமே கல்லூரி முதல்வர் முறையாக பின்பற்றவில்லை என்றும், நேர்மையான முதல்வராக இருந்தும் அவருக்கு கீழ் பணிபுரியும் சில அதிகாரிகள் செய்யும் ஊழல்களை ஏன்? தடுக்கவில்லை. இதனால் கல்லூரி முதல்வருக்கும், வனவருக்கும் மறைமுகமாக ஏதோ உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நேர்மையாக பணிபுரிவதாக கூறிக்கொள்ளும் கல்லூரி முதல்வர், ஏன்? இங்கு பணிபுரியும் வனச்சரகரின் உறவினருக்கு பினாமி பெயரில் டெண்டர் வழங்க அனுமதிக்க வேண்டும். முதல்வருக்கு தவறு என்று தெரிந்தும் ஏன்? அந்த வனசரகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதல்வருக்கும் வனச்சரகருக்கும் ஏதும் மறைமுக பிரச்சனை உள்ளதா? இதனை அரசு விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அப்படி விசாரித்தால் வனச்சரகர்தான், கல்லூரியில் உள்ள அனைத்து வேலைகளையும், ஆட்கள் வைத்து செய்வது தெரியவரும். மேலும் சில வேலைகளை செய்யும் போதும் பொருட்கள் வாங்கும் போதும் போலி பில்கள் தயாரித்து பணம் வாங்கியதும் தெரிய வரும். இதற்கு கருவூலத்தில் உள்ள பைல்களே சாட்சி.மேலும் நேரடி நியமன வனவர்களிடம் பயிற்சியின் போது ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ 10 ஆயிரம் வசூல் செய்துள்ளனர். அதற்கு முறையான கணக்குகள் தராமல் பயிற்சி முடிவின் போது சிறிது பணமே கொடுத்தாக பயிற்சி முடித்த வனவர்கள் புலம்பிச் சென்றனர். மேலும் ஒப்பந்த தாரர்களிடம் முன் கூட்டியே பேசி ஏன் டெண்டர் விட வேண்டும்? இதுதான் நேர்மையா?
டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். ஒழிவு மறைவு இல்லாத டெண்டர் வேண்டும். உள்ளே பணிபுரியும் யாரும் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பணிகள் செய்ய கூடாது. இதில் எதுவும் பின்பற்றவில்லை என்றால் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நியமன வனவர்கள் பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சி வனவர் ஒருவர் கல்லூரி விடுதியிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குரூப்-2 தேர்வில் தோல்வி பெற்றதால் தற்கொலை என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
கல்லூரியில் விடுமுறை தராமல் தொடர்ச்சியாக நெடுந்தூர பயணத்திற்கு லாயக்கற்ற ,ஒரு சுவாரஜ் மஸ்தா வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் களக் கல்வி பயணம் கொடுத்ததால் வனத்துறையை விட்டு வெளியே தம்பித்து வர வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அந்த வனவர் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக அவருடன் பயின்ற வனவர்கள் தற்போது தெரிவிக்கன்றனர்.
முதல்வர், மாவட்ட கலெக்டரிடம் நன்கு பழக்கம் வைத்து உள்ளதால், கல்லூரி நிர்வாகம் சம்மந்தமாக, அவரிடம் புகார் தந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறாரோ? என்று தெரியவில்லை என தெரிவித்தனர். இப்படி ஆண்டிபட்டி வனவியல் பயிற்சி கல்லூரி யில் நடந்து வரும் முறைகேடுகளை கண்டுபிடித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றனர்.