Published on 14/05/2018 | Edited on 14/05/2018
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் பேசுகையில்,
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலை ஒட்டிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனக்கூறினார்.
கடந்த 24 மணிநேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 4 சென்டி மீட்டர் மழையும், உடுமலைப்பேட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.