Published on 11/02/2021 | Edited on 11/02/2021

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சசிகலாவை டி.டி.வி.தினகரனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது. டி.டி.வி.தினகரனிடம் இருந்து சசிகலாவைக் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.