![Vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/GIpIt0zSE0pFaTNn-TK-7mh9Us4TiHQI4FTRiB0SGdY/1546012202/sites/default/files/inline-images/v81.jpg)
சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர்களிடம் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார்.
![Vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/o_1DwuuGXnyYgTEN3BZHdu93aky7Q4dmyhxZwAFzpws/1546012224/sites/default/files/inline-images/v82.jpg)
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆசிரியர்களின் போராட்டம் நடத்துவதற்கு காரணம், தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்தான். ஆசிரியர்கள் போராட்டம் பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாமல் உள்ளார்.
முதலமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. எனவே அவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விரைவில் நலம் பெறுவார். கம்பீர குரலுடன் அவர் மீண்டும் வருவார். தேர்தல் தொடர்பான முடிவுகளையும் அவர் எடுப்பார். இவ்வாறு கூறினார்.