Published on 25/12/2024 | Edited on 25/12/2024
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி,
எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.