அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் மூன்று மாணவர்கள் தேசிய அளவிலான பொதுதிறன் சோதனை தேர்வுகளின் (CAT Exam) அதிக மதிப்பெண்கள் பெற நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான அகமதாபாத் மற்றும் ஆனந்தில் உள்ள ஊரக மேலாண்மை மையங்களில் சேர்ந்து உயர்கல்வி பெறும் அழைப்பைப் பெற்றுள்ளனர். மேலும் வேளாண் மற்றும் தோட்டக்கலை இளநிலை பாடப்பிரிவுகளில் கடந்த 6-வது பருவ காலம்வரை மாணவிகள் செல்வநாயகி மற்றும் அபிராமி ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
வேளாண் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திருமால் கண்ணன், வேளாண் விரிவாக்கத்துறை மற்றும் அவரது ஆராய்ச்சி வழிகாட்டி முனைவர் ராஜ் பிரவின் ஆகியோர் இந்திய சமூக அறிவியல் கழக ஆய்வு ஊக்கத்தொகை (Indian Council for social science research fellowship) 2020-2021 ஆண்டிற்கு ரூ.1,10,000 என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதனையறிந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் அவரது அலுவலகத்திற்கு சிறந்து விளங்கிய வேளாண் மாணவர்களை அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் வேளாண்புல முதல்வர் சுந்தரவரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.