வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குட்பட்ட கருத்தமலை வனப்பகுதிக்குள் முள்பாடிமலை மற்றும் பங்களாமேடு பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல், வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கிகளுடன் சென்றுள்ளனர். அப்போது ராசிமலை என்ற இடத்தில் நாட்டு துப்பாக்கி முட்செடியில் சிக்கி அதை இழுக்கும்போது, துப்பாக்கி வெடித்து அதிலிருந்த தோட்டா வெளியேறி குழுவில் இருந்த தூசிவேந்தன் என்பவரிடன் இடது தலை பகுதியில் தாக்கி உள்ளது. இதனால் தூசி வேந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதுப்பற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்து அதிர்ச்சியாகியுள்ளனர். துப்பாக்கி சூடு சம்மந்தமாக இறந்துப்போன தூசிவேந்தனின் சித்தப்பா திருக்குமரன், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த தூசி வேந்தனின் உடலை கைப்பற்றி தங்களது வாகனத்திலேயே ஏற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முள்பாடி மலை பகுதியை சேர்ந்த 16 வயதான சந்திரசேகர், 32 வயதான மனோகரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதில் இருந்து தப்பி தலைமறைவாகவுள்ள 4 பேரை வேப்பங்குப்பம் போலீசார் தேடி வருகின்றனர்.