Skip to main content

தேர்தல் களம் – பறக்கும் படையிடம் சிக்கிய 3 கிலோ தங்கநகைகள்

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 


வேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுதாக்கல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தத்தமது பகுதியில் பண நடமாட்டம் உட்பட பலவற்றை கண்காணித்து வருகின்றனர்.

g


அதன்படி ஜீலை 11ந்தேதி காலை, வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது, வாணியம்பாடி   பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் ரமேஷ் என்பவர் வந்த வாகனத்தை சோதனை செய்த போது  தங்கநகைகள் இருந்தன. இதனைப்பார்த்து அதிர்ச்சியான அதிகாரிகள் அதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர்களிடம் ஆவணங்கள் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.


அந்த காரோடு அவரை தாலுக்கா அலுவலகம் அழைத்து வந்தனர். காரில் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து கணக்கிட்டபோது, 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் இருந்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்த வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி. இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, ரமேஷ் குடும்பம் வாணியம்பாடியில் நகைக்கடை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மற்ற நகைக்கடைகளுக்கு நகைகள் செய்து விற்றும் வருகிறார்களாம். இது தொடர்பான ஆவணங்கள் எங்கே எனக்கேட்டபோது, கடையில் உள்ளது எனக்கூறியதாக அதிகாரிகள் வட்டாரம் கூறுகின்றன.


வேலூர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் நடைபெறும் பறக்கும்படை சோதனையில் பெரியதாக கிடைத்த பொருள் இது என்பது குறிப்பிடதக்கது.

சார்ந்த செய்திகள்