Published on 23/10/2019 | Edited on 23/10/2019
தமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்துள்ளது.
அந்த அனுமதியின்படி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என இந்த 6 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்து கடிதம் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியும் ரூபாய் 325 கோடி செலவில் அமைக்கப்படும். இதில் மத்திய அரசின் நிதி பங்கீடு 190 கோடியும்,மாநில அரசின் நிதி பங்கீடு 130 கோடியும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியாக அமைக்கப்படும் இந்த 6 மருத்துவக்கல்லூரிகளால் கூடுதலாக 900 எம்பிபிஎஸ் இடங்கள் தமிழகத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.