Published on 29/08/2020 | Edited on 29/08/2020
![velankanni temples festival peoples nagai district](http://image.nakkheeran.in/cdn/farfuture/rrjq856p4enVxV76Khw1sho9ymcHTvX3jO6AsOI-dIQ/1598671596/sites/default/files/inline-images/velankanni_1.jpg)
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29/08/2020) மாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 08- ஆம் தேதி வரை நடக்கும் விழாவை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றி தொடங்கி வைக்கிறார்.
கரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், வீட்டில் இருந்து திருவிழா நிகழ்ச்சிகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் 48- வது ஆண்டு திருவிழாவும் இன்று மாலை 05.45 மணிக்கு தொடங்குகிறது.