Skip to main content

ஊரடங்கில் தொடரும் வாகன சோதனை... அலறும் கிராமப்புற மக்கள்...

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

Vehicle Testing


கரோனா பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறை நீட்டிக்க தொடங்கியதில் இருந்து ஊரடங்கில் இருந்து பலவித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடைகளில் பணிபுரிய செல்லலாம், பொருட்கள் வாங்கச் செல்லலாம் என பல தளர்வுகள்.
 


முதல் முறை ஊரடங்கு அமல்படுத்தியபோது, அநாவசியமாக இளைஞர்கள் உட்பட பெரியவர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றுகிறார்கள் என வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யத் துவங்கினர். தற்போது வரை அந்த நடைமுறை தொடர்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 82 நாட்களில் 43,505 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45,735 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மூலம் 34,908 இருசக்கர வாகனங்கள், 185 ஆட்டோ, 184 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 35,277 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14.06.2020 தேதி மட்டும் 707 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 707 பேர் கைது செய்யப்பட்டு, 289 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 


வழக்குப் போடவேண்டும், நாங்கள் சின்சீயராக வேலை பார்க்கிறோம் பாருங்கள் என உயர் அதிகாரிகளுக்குக் காட்டுவதற்காகத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். வழக்குகளைப் பதிவு செய்யும்போது, நகர்ப் பகுதியில் அநாவசியாகச் சுற்றுபவர்களைப் பிடித்து வழக்குப் போடுவது மிகமிகக் குறைவு. கிராமத்தில் இருந்து காய்கறி விற்பனைக்காக, மின்மோட்டர் ரிப்பேர்க்காக, மருத்துவமனைக்கு என நகர்ப் பகுதியை நோக்கி வருபவர்களில் அழுக்கு உடை அணிந்துக்கொண்டோ அல்லது பார்ப்பதற்கு ஏமாளியாக இருப்பவர்களை ஓரம் கட்டி வழக்குகள் பதிவு செய்துவருகின்றனர். இது பெரும்பான்மை மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்