தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம், ஆய்வகம், சுற்றுச்சுவர், நுழைவு வாயில் போன்றவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை இளங்கோதை தலைமையில், திருநாவலூர் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்.பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை பள்ளி சார்ந்த கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தார். விழாவில் கலந்துகொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும், பள்ளிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தனர்.
இந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், இந்திராணி கணேஷ்குமார், ஊராட்சிமன்ற தலைவர்கள் உமா சந்திரகாசன், அலமேலு காசிநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சிமன்ற துணை தலைவர்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவை பள்ளியின் ஆசிரியர்கள் சண்முகம், கலியமூர்த்தி, சத்தியமூர்த்தி, கலைவாணி, விஜயராணி, உடற்கல்வி ஆசிரியர் அன்பு சோழன் மற்றும் அலுவலக பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.