நாங்குநேரி இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளரான காங்கிரசின் ரூபி மனோகரனை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வி.சி.க.வின் தலைவரான திருமாவளவன். ஏர்வாடியில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்களின் கூட்டத்தில் பேசிய போது, காங்கிரசின் கி.மா.தலைவர் சிவக்குமார். தி.மு.க. மா.செ.ஆவுடையப்பன், வி.சி.க.வின் செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நமது வேட்பாளர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 18 வது வயதில் விமானப்படையில் பணியாற்றியுள்ளார். தற்போது தனியார் கட்டிட ஒப்பந்தக்காரராக வளர்ச்சியடைந்துள்ளார். இவர் 3 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார். இடைத்தேர்தலில் தற்போது போட்டியிடுகிறார். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் வெற்றிபெரும். மதசார்பற்ற தன்மையை தி.மு.க. கட்சியால் தான் காப்பாற்ற முடியும். அதனால்தான் வி.சி.க, தி.மு.க.வை ஆதரிக்கிறது. அதற்காக நாம் கவனக்குறைவாய் இருந்தால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோம். கவனமாகச் செயல்பட வேண்டும். காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.