
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்தான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியிலிருந்து ராசிபுரம் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பட்டணம் சக்தி நகர் பகுதியில் சாலையோரம் இருந்த குடிசை வீட்டுக்குள் புகுந்தது. கிஷோர் என்ற நபர் அந்தக் காரை ஓட்டிவந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. அந்தக் குடிசை வீட்டில் வசித்து வந்த தம்பதிகள் இருவரும் அருகில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அந்தக் குடிசை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. விபத்தில் படுகாயமடைந்த கிஷோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிசை வீட்டில் கார் புகுந்து விபத்தான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.