Skip to main content

"வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார் வருண் சிங்" - கமல்ஹாசன்

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

jkl

 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 8ம் தேதி அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக இன்று காலையில் அறிவித்துள்ளது.

 

கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு இரங்கல் குடியரசுத்தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கேப்டன் வருண் சிங்கின் மரணத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, " குரூப் கேப்டன் வருண்சிங் மறைந்து விட்டார். வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார். என் அஞ்சலிகள்" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்