Published on 26/09/2019 | Edited on 26/09/2019
அண்ணா பல்கலைகழகத்தில் பகவத்கீதை தொடர்பான பாடம் விருப்ப பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடைமுறைக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவனம் பொறியியல் கல்லூரிகளில் தத்துவவியல் என்ற பாடப்பிரிவில் பகவத் கீதையை ஒரு பாடமாக அறிவித்துள்ளது. விருப்பப்பாடம் என்று மழுப்பப் பார்க்கிறது. பொறியியல் கல்லூரிகளில் பகவத் கீதையை படிக்கவேண்டிய அவசியம் என்ன? என்னதான் இருந்தாலும் இது ஒரு சமயம் சார்ந்த நூல் என்றார் .