மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கர்ணமகாராஜன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜ், சென்னை லயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ராஜராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் கந்தசாமி, திருவண்ணாமலை – வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், கரூர் அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறை தலைவர் இளங்கோவன் என பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.
ஆராய்ச்சி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர்களால் பாலியல் தொல்லைகள் தொடரும் நிலையில், சென்னை பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
அதில், பல்கலைக்கழக வளாகத்தை பாலியல் துன்புறுத்தலற்ற இடமாக மாற்றுவதற்கு தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. பல்கலைக்கழகம் என்பது அறிவுசார் இடமே தவிர, பாலியல் துன்புறுத்தலுக்கான இடம் கிடையாது. அதுபோன்ற செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். பாதிக்கப்படும் மாணவிகள், பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமையில் இயக்கும் குழுவினரிடமோ, பதிவாளரிடமோ, துணை வேந்தரிடமோ, தங்களது புகாரை எழுத்துபூர்வமாக அளிக்கலாம். மேலும், மாணவர்கள் அல்லது பேராசிரியர்கள் மாணவிகளிடமோ, மற்ற பெண்களிடமோ பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவர்கள் துணைவேந்தர் அறைக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவியரைத் தங்கள் வீடுகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கை பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கீனமாகக் கருதப்படும். பேராசிரியர்களின் வீடுகளில் மாணவிகள் தங்கக்கூடாது. பேராசிரியர்கள் தலைமையில் தனிப்பட்ட கல்விச் சுற்றுலா எதுவும் செல்லக்கூடாது. அவ்வாறு செல்ல வேண்டுமென்றால், பல்கலைக்கழகத்திடம் சிறப்பு அனுமதி பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனியாவது பல்கலைக்கழகங்களில் பாலியல் தொல்லை என்ற பேச்சுக்கே இடம் தராமல் நல்லொழுக்கம் பேணப்பட்டால் சரிதான்!