Published on 03/12/2020 | Edited on 03/12/2020
![UNION HOME MINISTRY TOP 10 POLICE STATION LIST](http://image.nakkheeran.in/cdn/farfuture/vuyirvf3nWnK_PpQVuiHQkfQEcyXLzeub1QhIwmeBmY/1606980766/sites/default/files/inline-images/mini1233.jpg)
நாட்டிலேயே சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் (AWPS) இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
நாட்டில் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் மணிப்பூர், தமிழ்நாடு, அருணாச்சலப்பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், கோவா, அந்தமான் நிக்கோபார், சிக்கிம், தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய மாநில, யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 10 காவல் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.
இதில் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குகளை விரைவாக விசாரித்தல், சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற செயல்களால் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.