Skip to main content

ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

two youth river passes away


கோவை நொய்யல் ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மூன்று மணிநேரத் தேடுதலுக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

 
கோவை பாப்பநாயக்கன் புதூர், இந்திரா நகர்ப் பகுதியில் வசித்துவரும் நாகராஜன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (31), இதே பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் பிரபாகரன் (29) ஆகிய இருவரும் நண்பர்கள். தமிழ்ச்செல்வன் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். பிரபாகரன் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தார். 

 

நண்பர்களான இருவரும் தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளான இன்று கோவிலுக்குச் சென்றுவிட்டு மாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சித்திரைச்சாவடி அணை பகுதிக்குச் சென்றனர்.  கைகாட்டி பாலத்தின் கீழ் ஆற்றில் இறங்கிய இருவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் 20 அடி ஆழச் சேற்றில் சிக்கிக் கொண்டார்.
 

இதனால் பதற்றமடைந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனை மீட்க முயற்சி செய்தபோது, நீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்கும் முயற்சியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி இருவரது உடல்களையும் சடலமாக மீட்டனர்.

 

பின் அவர்களது உடல்களை தீயணைப்புத் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவை மேயர் ராஜினாமா; மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Coimbatore Mayor resigns; Corporation Commissioner explanation

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூவர் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். இத்தகைய சூழலில்தான் கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார்.

முன்னதாக கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பான கடிதத்தை அவர் திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Coimbatore Mayor resigns; Corporation Commissioner explanation

அதே சமயம் கோவை மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கோவை மேயர் கல்பனா ராஜினாமா!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Coimbatore Mayor Kalpana resigns

கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 97 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மூவர் அதிமுக கவுன்சிலர்கள் ஆவர். இத்தகைய சூழலில்தான் கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இது தொடர்பான கடிதத்தை அவர் திமுக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.